PDP குரூப் ஆஃப் கம்பெனிஸ் 1965-ஆம் ஆண்டு எங்கள் உதய தெய்வம் P.துரைப்பாண்டியன் அவர்களால் தொடங்கப்பட்டது. பால்துரை பத்திர வாடகை சென்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம். நாளடைவில் 1970-ஆம் ஆண்டு இணைப்பு தொழிலாக பந்தல் டெக்ரேட்டிங் யூனிட் என்ற பெயரில் புதிய தொழிலை அறிமுகப் படுத்தினார் 1996-ஆம் ஆண்டு வரை பத்திர வாடகை மற்றும் பந்தல் டெக்ரேட்டிங் யூனிட் இணைந்து செயல் பட்ட நிறுவனம் “வாழ் வது ஒருமுறை வாழ்தட்டும் தலைமுறை” என்ற அடை மொழிக்கு அடையாளப் வாழ்ந்த நிறுவணர் மண்ணுலகில் இருந்து விண்ணுலகிற்கு சென்றார்கள் நிறுவணரின் மறைவுக்கு பின் 1999-ஆம் ஆண்டு முதல் மேடை அலங்காரம் PDP ஸ்டேஜ் டெக்ரேஷன் என்ற பெயரிலும் ஒலி ஒளி அமைப்பு தூயவன் PDP பவர் சிஸ்டம் என்ற பெயரிலும் மங்கள நேரங்களில் மகத்தான சேவையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற சொல்லுக்கு இனங்க 1999ம் முதல் எங்கள் தந்தையாரின் மறைவுக்கு பின் எங்கள்
தாயாரின் வழிகாட்டுதல் படி மென்மேலும் வளர்ச்சி பெற்ற எங்கள் நிறுவனம் நீங்கா நினைவுகளுடன் மறைந்த எங்கள் தயார் D.சரோஜா அம்மாள் 2011-ஆம் ஆண்டு மறைவுக்கு பின் DSAவாடகை சென்டர்என்ற பெயரில் இணைப்பு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மேலும் 2024-ஆம் ஆண்டு முதல் பாண்டியன் மார்க்கெட்டிங் என்ற பெயரில் திருமணம் மற்றும்பிறந்தநாள் சுப நிகழ்ச்சிதிருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஒலி ஒளி அமைப்பு சாமான்கள் மற்றும் டெக்கரேஷன் பொருட்கள் அனைத்தும் மொத்த வியாபாரம் செய்து வருகின்றோம்.
PDP குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில் சார்பு நிறுவனங்களாக இல்லந்தோறும் உங்களை மகிழ்விக்க தூயவன் PDP கேபிள் டிவி மற்றும் இணையதள சேவைபோன்ற சார்பு நிறுவங்களை திக்கட்டும் புகழ் மணக்கும் திசை மாநகரில் நடத்தி வருகின்றோம்மேலும் சேலம் மாநகரில் மாலா ஸ்டோர்ஸ் மாலா டிரேடர்ஸ் என்ற பெயரிலும் வில்லுக்குறி-யில் KKM டயர்ஸ் என்ற பெயரில் நடத்தி வருகின்றோம்.